Skip to main content

Posts

பிரபல இயக்குநர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா... விதார்த்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்...

பிரபல இயக்குநர் மிஸ்கின் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விதார்த்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.  இந்த படத்தில் கார்த்திக் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய "உச்சந்தல ரேகையில" என்ற பாடல் ரிலிசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார்.  இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஸ்கின் இயக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகர் விதார்த் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் பிசாசு 2 படத்தை தயாரித்த ராக்ஃபோர்ட் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக டி.முருகானந்தம் தயாரிக்கவுள்ளதா...

பிக்பாஸ் போட்டியாளர் பவானி ரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள்... சமூக வலைதளங்களில் வைரல்...

பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளருமான பவானி ரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள நடிகை பவானி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற நாடகத்திலும் நடித்திருந்தார். சின்னத்தம்பி சீரியல் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும் நடித்திருந்தார்.  பின்னர் இவர் சமூக வலைதளங்களில் அதிகம் செயல்பாட்டுடன் இருந்தார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பவானி ரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள்...

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் அகாதெமி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் இந்நாள் கேப்டனுமான எம்.எஸ் தோனி பெயரில் பெங்களூரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 350 ஒரு நாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சேம்பியன் டிராபி என மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. எம்.எஸ் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.  இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஆமதாபாத்தில் எம்.எஸ் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பெங்களூரில் எம்.எஸ் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனங்களான கேம்பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதன் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன.  எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி ஆலோசகரான தோனி இதுபற்றி கூறியதாவது: எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தொழில்நுட்...

பாண்டியாவிற்கு ஏற்பட்ட சிக்கல்... வலைப் பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்ட கேகேஆர் அணி வீரர்...

இந்த மாதம் 17-ஆம் தேதி ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் சிறப்பாக வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.  இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய டெல்லி அணியின் ஆவேஷ்கான் மற்றும் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் டி20 உலகக்கோப்பியின் இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் வலைப்பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டார். உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹதராபாத் அணிக்காக விளையாடி மிகவும் சிறப்பாக வேகமாக பந்து வீசியதன் காரணமாக இவர் இந்திய வலைப்பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.  இதில் டெல்லி அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் மற்றும் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் 15 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கேக...

இனிமேல் நாங்கதான் எல்லாமே... எங்கள யாராலும் ஒன்னும் செய்ய முடியாது... அதிபர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது உலகநாடுகள் மத்தியில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.  அமெரிக்காவை எதிர்கொள்ள சக்திவாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை, அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்வது உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா தங்களிடம் உள்ள ஆயுதங்களை கொண்டு பிரம்மாண்டமான ராணுவ கண்காட்சியை நடத்தியுள்ளது. அதில் பேசிய அதிபர் கிம் ஜாங் அன் "அமெரிக்காவின் விரோதபோக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத சக்திவாய்ந்த ராணுவமாக மாற்றப்படும்" என கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் காலமானார்... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்...

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.  இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிறை ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். நடிகராக பிரபலமானதற்கு பிறகும் மேடை நாடகங்கில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வாலின் தந்தையாக காதல் கொண்டேன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதுவரை 200க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு வயது 83. பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....

பிக்பாஸ் 5 சீசனில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரி... உள்ளே செல்லவிருக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசனில் பிரபல நடிகை ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக போட்டியாளராக கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் பிரபல நடிகை ஷாலு ஷாமு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக தகவல் பரவி வருகின்றன.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்துவை போட்டியாளராக அறிவித்த விஜய் தொலைக்காட்சிக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒரு திருநங்கையாக தன்னுடய துன்பங்களை நமிதா தெரிவிக்க, போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நமிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அவர் கொரோனாவால் விலகியதாகவும், உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறியதாகவும் கூறப்படுகின்றன. ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் நடிகை ஷாலு ஷாமு கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியா...