Skip to main content

பிரபல இயக்குநர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா... விதார்த்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்...

பிரபல இயக்குநர் மிஸ்கின் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விதார்த்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகை பூர்ணா மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 
இந்த படத்தில் கார்த்திக் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய "உச்சந்தல ரேகையில" என்ற பாடல் ரிலிசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார். 
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஸ்கின் இயக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகர் விதார்த் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் பிசாசு 2 படத்தை தயாரித்த ராக்ஃபோர்ட் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக டி.முருகானந்தம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments