பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளருமான பவானி ரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள நடிகை பவானி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற நாடகத்திலும் நடித்திருந்தார். சின்னத்தம்பி சீரியல் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலிலும் நடித்திருந்தார்.
பின்னர் இவர் சமூக வலைதளங்களில் அதிகம் செயல்பாட்டுடன் இருந்தார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பவானி ரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள்...
Comments
Post a Comment