Skip to main content

பழம்பெரும் நடிகர் காலமானார்... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்...

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. 
இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிறை ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். நடிகராக பிரபலமானதற்கு பிறகும் மேடை நாடகங்கில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வாலின் தந்தையாக காதல் கொண்டேன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதுவரை 200க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு வயது 83. பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments