Skip to main content

பாண்டியாவிற்கு ஏற்பட்ட சிக்கல்... வலைப் பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்ட கேகேஆர் அணி வீரர்...

இந்த மாதம் 17-ஆம் தேதி ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் சிறப்பாக வீரர்கள் விளையாடி வருகிறார்கள். 
இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய டெல்லி அணியின் ஆவேஷ்கான் மற்றும் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் டி20 உலகக்கோப்பியின் இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் வலைப்பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டார். உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹதராபாத் அணிக்காக விளையாடி மிகவும் சிறப்பாக வேகமாக பந்து வீசியதன் காரணமாக இவர் இந்திய வலைப்பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டார். 

இதில் டெல்லி அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் மற்றும் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் 15 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் 8 ஆட்டங்களில் விளையாடி இரண்டு.அரைச் சதங்களுடன்  265 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் சில ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 
இதையடுத்து மும்பை அணிக்காக விளையாடிய ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இந்த ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவர் கூட வீசப்படாததால் அவரது உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ஹார்திக் பாண்டியா உடற்தகுதியால் பந்து வீசமுடியாத நிலை ஏற்பட்டால் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியின் டி20 அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் ஹார்திக் பாண்டியாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Comments