Skip to main content

முடிந்தது ஐபிஎல் லீக் சுற்று... அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் யார் யார்...

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் பாதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடங்கப்பட்டது. 
இதில் சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நடப்பு சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்ற அணிகளும் ப்ளே ஆஃப் தகுதி சுற்றுக்கு கடினமாக போராடியும் வெளியேறியது. 

நேற்று ஐபிஎல் வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டு நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிவடைந்தது. இந்த நிலையில் நாளை முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன. நாளை மறுநாள் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் 2021-ல் நடந்து முடிந்த 14 லீக் சுற்றுகளில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் விவரங்களை காண்போம். 


அதிக ரன்கள் எடுத்தவர்களின் விவரங்கள்...
நடந்து முடிந்த ஐபிஎல் 14 லீக் சுற்றுகளில் 13 போட்டிகளில் விளையாடி 626 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுலைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுபிளசிஸ் 14 போட்டிகளில் விளையாடி 546 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் 544 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் விவரங்கள்...
நடந்து முடிந்த ஐபிஎல் லீக் சுற்றுகளில் 14 லீக் போட்டிகளில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் 30 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து 14 லீக் போட்டியில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆவேஷ் கான் 22 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 21 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா மூன்றாவது இடத்தில் உள்ளார். 

Comments