Skip to main content

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா மும்பை இந்தியன்ஸ்... ரசிகர்களின் கனவு என்னவாகும்...

ஐபிஎல் டி20 தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்று ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற பெங்களூரு டெல்லி அணியும், ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றினை தவறவிட்ட ஹைதராபாத் அணியுடன் விளையாடுகின்றது.
ஐபிஎல் கிரிக்கெட் இறுதி
கட்டத்தை எட்டியுள்ளது.
டெல்லி, சென்னை, பெங்களூரு
ஆகிய 3 அணிகள் பிளே-ஆப்
சுற்றுக்குள் அதிகாரப்பூர்வமாக
நுழைந்துள்ளன. ஆனால்,
4-வது இடத்தை கைப்பற்றுவது
கொல்கத்தா என்பது கிட்டத்தட்ட
உறுதியாகியுள்ள நிலையில் இன்று
நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டம்
அதை அதிகாரப்பூர்வமாக உறுதி
செய்யும்.

கொல்கத்தா 4-வது இடத்தில்
உள்ளபோதும் இன்று நடைபெற
உள்ள போட்டியில் மிகப்பெரிய
அளவில் வெற்றிபெற்றால்
புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி
4-வது இடத்திற்கு சென்று பிளே ஆப்
சுற்றுக்கு தகுதி பெறலாம். ஆனால்,
அவ்வாறு நிகழ்வதற்கு கிட்டத்தட்ட
வாய்ப்பே இல்லாத சூழ்நிலையே
நிலவி வருகிறது.


நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக்
ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்
அணி ஐதராபாத் அணியை இன்று
எதிர்கொள்கிறது.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற
வேண்டுமானால் மும்பை அணி
இப்போட்டியில், முதலில் பேட்டிங்
செய்து 200 ரன்களுக்கு அதிகமாக
குவிக்க வேண்டும். மேலும்,
ஐதராபாத் அணியை குறைந்தது
171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த
வேண்டும்.
ஐதராபாத் அணியை 171 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தினால்
மட்டுமே ரன்ரேட் அடிப்படையில்
மும்பை அணி 4-வது இடத்திற்கு
சென்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி
பெற முடியும். ஐதராபாத் அணியை
171 ரன்கள் வித்தியாசத்தில்
வீழ்த்துவது கிட்டத்தட்ட
சாத்தியமற்றது என்பதால் நடப்பு
ஐபிஎல் தொடரில் மும்பை அணி
பிளே-ஆப் சுற்றுக்குள் செல்வது
என்பது கனவாகவே அமையும்
என கிரிக்கெட் விமர்சகர்கள்
தெரிவித்துள்ளனர்.

Comments