Skip to main content

தாய்லாந்தில் பெய்த கனமழை... புகழ் பெற்ற நகரம் வெள்ளத்தில் மூழ்கியது...

தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் வரலாற்று புகழ்பெற்ற சிறப்புமிக்க நகரமான ஆயுத்தா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. பல கோயில்கள் நீருக்கடியில் சென்றுவிட்டது. 

இது தொடர்பாக தாய்லாந்து நாட்டின் ஊடகங்கள், "தாய்லாந்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாடு இரண்டு வாரமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக வாரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான ஆயுத்தாயா நகரம் நீருக்குள் மூழ்கியுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் வெள்ளத்திற்கு அடியில் சென்றுவிட்டது. கடந்த பத்து வருடங்களில் தாய்லாந்து சந்தித்த மிக மோசமான வெள்ளம் இதுவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், "32 மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 9 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்" என்று செய்தி வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான வெள்ளம், காட்டுதீ, வறட்சி போன்ற பேரிடர் நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன. ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

இதையடுத்து உலகம் வெப்பமயமாக்கலைத் தடுக்க வளர்ந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். 

Comments