Skip to main content

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை... உம்ரான் மாலிக் அதிரடி பந்து வீச்சு...

ஐபிஎல் தொடரின்.52-வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. 
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீசி சன்ரைசஸ் அணியின் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார். 

நேற்றைய போட்டியில் 9-வது ஓவரில் வீசிய நான்காவது பந்தின் மூலம் உம்ரான் மாலிக் இந்த சாதனையை செய்துள்ளார். அந்த மூன்று பந்துகளை மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். 
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 143 கி.மீ வேகத்தில் பந்து வீசினார். இதையடுத்து உம்ரான் மாலிக் இந்த ஐபிஎல்-லில் அதிவேகமாக பந்து வீசியவர்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். 

Comments