Skip to main content

உடல் தானம் செய்த பிரபல நடிகர்... இவரை பின்பற்றி தானம் செய்ததாக அறிவிப்பு...

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் உடல்தானம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நடிகர் என்பதை தாண்டி சமூக சேவகரும் கூட. கொரோனா தொற்று காலத்தில் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா  நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வந்தார். இந்த நிலையில் இவர் உடல் தானம் செய்துள்ளார். 

நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர். நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரை சந்தித்து வாழ்த்து பொறுவது நடிகர் ரோபோ சங்கரின் வழக்கம் ஆகும். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் இணைந்து அகர்வால் கண் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட நடிகர்.ரோபோ சங்கர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களை பின்பற்றி தானும் உடல்தானம் செய்தார். 
அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளன்று முழு உடல்தானத்திற்கான சான்றிதழை நடிகர் கமல்ஹாசன் அவர்களிடம் காண்பிக்க இருப்பதாக நடிகர் ரோபோ சங்கர் அறிவித்துள்ளார். 

Comments