Skip to main content

9 நாட்கள் கொண்டாட்டம் தான்...இன்று தொடங்குகிறது நவராத்திரி விழா...

இன்று முதல் நவாராத்திரி விழா தொடங்குகிறது. 9 நாட்களுக்கு மக்கள் வீடுகளில் விரதம், வழிபாடு என்று பின்பற்ற தொடங்குவார்கள்.
இந்து பாரம்பரியத்தின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகாஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள் பத்தாவது நாள் வெற்றி பெற்றார். இதை மையமாக வைத்து முதல் 9 நாட்கள் நவராத்திரி விழாவும் பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாட்கிளில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வணிக வளாகங்களையும் சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்துவார்கள். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். தினமும் காலை, மாலை என்று இரண்டு வேலைகளிலும் கொலுவின் முன்பு கோலமிட்டு, மலர்கள் படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். 
நவராத்திரியின் 9 நாட்களும் முப்பெரும் தேவிகாளாக விழங்கும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோர்களின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்கை தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியையும், அதுக்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழபாடு செய்வார்கள். நவராத்திரி விரதம் மேற்கொள்ளும் அனைவருக்கும் விரும்பியது கிடைக்கும் மற்றும் முப்பெரும் செல்வங்களான கல்வி, வீரம், செல்வம் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. 
இந்த நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. முதல் 9 நாட்களும் நவராத்திரி விழாவும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. 

Comments