Skip to main content

சென்னை 28 படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் நடிகர்... அடடே இவரா அந்த நடிகர்..!

பிக்பாஸ் 5-வது சீசன் 3-ஆம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. வழக்கம் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் ஒருவர் சென்னை 28 படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான "சென்னை 28 II" படத்தில் நடிகர்கள் சிவா, ஜெய், பிரேம்ஜி, நிதின் சத்யா, இளவரசு, வைபவ், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் 2007-ஆம் ஆண்டு வெளியான "சென்னை 600028" என்ற படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

இந்த சென்னை 28 இரண்டாம் பாகத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் அபினய் என்பவர் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அபினய் ஏற்கனவே கணிதமேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர். இவர் நடிகர் ஜெமினி கணேசன் அவர்களது பேரன் ஆவார். 
நடிகர் அபினய் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிகர் வைபவ் அவர்களின் நண்பனாக கணேசன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சென்னை 28 படத்தில் இருக்கும்  இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Comments