Skip to main content

அவதார்-2 படத்தின் முக்கிய அப்டேட்... மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்...

மிகுந்த பொருள் செலவில் உருவாகி வரும் அவதார்-2  படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றியை பதிவு செய்த திரைப்படம் அவதார். இரண்டு  மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் எடுக்கப்பட்ட அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்த திரைப்படமும் இந்த அளவிற்கு வசூலை அள்ளியது இல்லை.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 12 வருடங்கள் கழித்து மீண்டும் வெளியாகவுள்ளது. அதன்படி அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த பகுதியிலும் பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Comments