Skip to main content

120 மொழிகளில் பாட்டு பாடிய மாணவி... கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை...

கேரளா மாநிலத்தில் மாணவி ஒருவர் 120 மொழிகளில் பாட்டுப் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். 

கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த சதீஷ் மற்றும் சுபத்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதீஷ். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகின்றனர். 16 வயதாகிய சுசேத்தா சதீஷ் துபாயில் உள்ள இந்தியப் பள்ளியில் பயின்று வருகிறார். 

இளம் வயதிலிருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் உள்ள சுசேத்தா சதீஷ் இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையில் அதிக ஆர்வம் செலுத்தினார். இதையடுத்து 2010-ஆம் ஆண்டில் துபாயில் உள்ள இந்திய கலையரங்கில் தொடர்ந்து 6 மணிநேரத்திற்கு மேலாக 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார். 


இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி இந்திய தூதரக கலையரங்கில் 122 மொழிகளில் பாடினார். இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுசேத்தா சதீஷ் "உலக குழந்தை மேதை" உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 
இது குறித்து மாணவி சுசேத்தா சதீஷ், "எந்த மொழி பாடலாக இருந்தாலும் அதை மனனம் செய்து சுலபமாக பாடுவேன். தற்போது 29 இந்திய மொழிகள் உள்பட 120 மொழிகளில் 7.20 மணிநேரம் பாடி உலக சாதனை படைத்துள்ளேன்" என்று கூறினார்.

Comments